சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 10240க்கும் சவரன் ரூ.81920க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரன் ரூ.82,000ஐ நெருங்கியது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ. 142க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது.
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம் 10ம் தேதி ஒரு கிராம் ரூ.10,150 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.81,200-க்கு விற்பனையானது. நேற்றும் அதே விலையை நீடித்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,920-க்கு விற்பனையாகிறது. வெள்ளிவிலையில் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
