நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடப்பதால் தேர்தல் நடத்தினால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும் என நடிகர் சங்கத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories: