சிவகாசி அரிமா பள்ளிக்கு ரூ.5 லட்சம் வளர்ச்சி நிதி: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

சிவகாசி. டிச.  17: சிவகாசி அருகே ரிசர்வ்லயனில் அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிய விழா மேடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு புதிய விழா மேடையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், கல்விச் செல்வம் அழியாச் செல்வம். கடைசிவரை வாழவைக்கும். கல்விக்காக தமிழக அரசு ஏராளமான நிதி உதவிகளை செய்து வருகிறது. அரசு நிதி உதவிகளை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று பேசினார்.

நிகழ்ச்சியில் அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி நிதிக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.5 லட்சம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சந்திரபிரபா எம்எல்ஏ, தொழிலதிபர்கள் ஆசைத்தம்பி, ஏ.பி.செல்வராஜன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சாத்தூர் சண்முககனி, ஆணையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: