ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் 320 கிராம் கஞ்சா சாக்லேட் பறிமுதல்

ஈரோடு, செப். 9: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வழியாக வரும் ரயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்துவதை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஈரோடு மதுவிலக்கு போலீஸ் எஸ்ஐ துளசிமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் ரோந்து சென்றனர். அப்போது, ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் பகுதியில் கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது.

அந்த பேக்கிற்கு பயணிகள் யாரும் உரிமைக்கோராததால், அந்த பேக்கை கைப்பற்றி சோதனை நடத்தினர். இதில், அந்த பேக்கில் 320 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா சாக்லேட்டினை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்தவர்கள் குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: