உக்ரைனில் முக்கிய அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

கீவ்: ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடந்துவரும் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நேற்று முன்தினம் நடத்தியுள்ளது. சுமார் 800 டிரோன்கள் மூலமாக அடுக்குமாடி கட்டிடங்கள் தாக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் முக்கயி அரசு அலுவலக க்ட்டிடங்கள் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட மிக பழமைவாய்ந்த அரசு கட்டிடத்தை ரஷ்யா தாக்கியது இதுவே முதல் முறையாகும். தூதர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுப்பயணத்தின்போது சேதமடைந்த கட்டிடங்களை அதிகாரிகள் காட்டினார்கள்.

Related Stories: