கவுன்சிலர் கூட இல்லாத கட்சி பக்குவம் இல்லாமல் பேசுகிறார் விஜய்: நயினார் நாகேந்திரன் தாக்கு

திருப்பூர்:திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: யாருடைய மாநாடும், யாருடைய சுற்றுப்பயணமும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் கட்சி தொடங்கியவுடன் கவுன்சிலராக, எம்எல்ஏவாக கூட இல்லாமல் அவரை தோற்கடித்து விடுவேன், அவர் தான் எனக்கு எதிரி எனக் கூறுவது பக்குவம் இல்லாத பேச்சாக உள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியாக 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள்,1300 எம்எல்ஏக்கள், தேசிய அளவில் மிகப்பெரிய தலைவராக நரேந்திர மோடி இருந்து வருகிறார்.சின்ன ஒரு மாநாட்டை நடத்தி விட்டு அவர்தான் எனக்கு எதிரி என பேசுவது பக்குவம் இல்லாத தன்மையை வெளிக்காட்டுவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: