காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு: பெங்களூருவில் 4 நாட்கள் நடக்கிறது

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் யுடி காதர் பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘ காமன் வெல்த் உறுப்பு நாடுகளின் இந்திய மண்டல சபாநாயகர்கள் கருத்தரங்கு பெங்களூரு விதான சவுதாவில் செப்.11ம் தேதி தொடங்குகிறது.

இந்த கருத்தரங்கை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், பேரவை செயலாளர்கள், வெளிநாட்டை சேர்ந்த சபாநாயகர்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்’என்றார்.

Related Stories: