சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுகிறார். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் வரும் 31ம் தேதி பணி ஓய்வு பெறுகின்றனர். இதற்கிடையில் தீயணைப்புத்துறை ஆணையரக தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்படுகிறார். இதற்கான உத்தரவு இன்று அல்லது நாளை பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், புதிய டிஜிபியாக நியமிக்கப்பட உள்ள வெங்கட்ராமன், நேற்று முன்தினம் மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். நேற்று காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளிநாடு செல்வதால், முன்னதாகவே வெங்கட்ராமன் சந்தித்து வாழ்த்துப் பெற்றதாக கூறப்படுகிறது. வெங்கட்ராமன் நாளை மறுநாள் புதிய டிஜிபியாக பதவி ஏற்கிறார் என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்? முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
- வெங்கட்ராமன்
- தமிழ்
- தமிழ்நாடு
- டிஜிபி
- முதல் அமைச்சர்
- சென்னை
- தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு காவல்துறை
- சங்கர் ஜிவால்
- காவல் வீட்டுவசதி கழகம்
- சைலேஷ் குமார் யாதவ்
