தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

பாங்காக்: தொலைபேசி அழைப்பு கசிந்த விவகாரத்தில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். தாய்லாந்து நீதிமன்ற உத்தரவை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த பிரதமர் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். கம்போடியுடனான எல்லைப் பிரச்சினை குறித்து ராணுவ தளபதியை விமர்சித்து தாய்லாந்து பிரதமர் பேசிய ஆடியோ கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கம்போடிய செனட் தை தலைவரான ஹன் சென்னிடம் ராணுவ தளபதியை விமர்ச்சித்து பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் தாய்லாந்து பிரதமரை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் வலுத்த நிலையில் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: