தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார் இடையூறாக இருந்ததால் நடவடிக்கை வேலூர்- ஆற்காடு சாலையோரம் நிறுத்தப்பட்ட

வேலூர், ஆக.29: போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் வேலூர்- ஆற்காடு சாலையோரம் நிறுத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வேலூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் வேலூர்-ஆற்காடு சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இதனால் எப்போது பார்த்தாலும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவ்வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர்.

இந்தநிலையில் சாலையோரம் ஏராளமான ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் போக்குவரத்து போலீசார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களுக்கு நேற்று பூட்டு போட்டனர். இதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘போக்குவரத்துக்கு இடையூறாக வரிசையாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் புகாரின் பேரில் எச்சரிக்கும் வகையில் பூட்டு போடப்பட்டது. ஆனால் அபராதம் விதிக்கவில்லை. வரும் நாட்களில் வரிசையாக ஆம்புலன்ஸ்களை நிறுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: