பிக்சல், துருவா ஸ்பேஸ் இணைந்து 3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவின

புதுடெல்லி: கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளித் தளத்தில் இருந்து 3 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. செயற்கைக்கோள் படங்களை சேகரிக்கும் பிக்சல் நிறுவனம் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்கும் துருவா ஸ்பேஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் விண்வெளித்துறையில் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த நிறுவனங்கள் நேற்று ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளன. பூமியை மிகவும் நெருக்கமாகவும், தெளிவாகவும் பார்க்கும் 6 ஹைப்பர்பெக்ட்ரல் செயற்கைக்கோள்களின் ஸ்டார்ட்-அப் தொகுப்பின் முதல் கட்டத்தை இவை நிறைவு செய்துள்ளன.

பெங்களூரை சேர்ந்த பிக்சல் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அவைஸ் அகமத் தனது எக்ஸ் தள பதிவில், “பிக்சல் இந்த ஆண்டு ஜனவரியில் 3 பயர்பிளை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. எங்களது முந்தைய செயற்கைக்கோள்கள் எவை சாத்தியம் என்பதை காட்டின. இவை அடுத்து என்ன என்பதை காட்டுகின்றன. 6 பயர் பிளை செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி வைத்திருக்கும்போது கிரகமே ஒரு உயிருள்ள ஆய்வகமாக மாறும்” என்றார். ஐதராபாத்தை தளமாக கொண்ட துருவா ஸ்பேஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவை சேர்ந்த அகுலா டெக் மற்றும் எஸ்பர் செயற்கைக்கோள்களின் பேலோடுகளை சுமந்து செல்லும் அதன் முதல் வணிக எல்இஏபி-01 செயற்கைக்கோளை ஏவிகிறது.

Related Stories: