29ம் தேதி நடைபெறவிருந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடமாற்றம் கே.வி.குப்பம் தாலுகாவில்

கே.வி.குப்பம்,ஆக.27: கே.வி.குப்பம் தாலுகாவில் நாளை மறுதினம் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கே.வி.குப்பம் தாலுகாவில் உங்களுடன் ஸ்டாலின் முகாமானது கிராம வாரியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நாளை மறுதினம் (29ம் தேதி) தொண்டான்துளசி, அரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் லத்தேரி தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. நிர்வாக காரணங்களுக்காகவும் நாளை மறுதினம் அரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அரும்பாக்கம் மோட்டூர் பகுதியில் உள்ள கல்வி உலகம் அரசினர் நிதிஉதவி உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. எனவே, தொண்டான்துளசி, அரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஊரக வளர்ச்சி , வருவாய், மருத்துவ காப்பீடு அட்டை, உணவு மற்றும் பாதுகாப்பு , ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், கால்நடை, வேளாண் உள்ளிட்ட 16 துறைகளுக்கு, 43 சேவைகள் பெற மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: