கட்சி ஆரம்பித்ததும் முதல்வராவது நடக்காது: மாஜி அமைச்சர் வேலுமணி அட்டாக்

திண்டுக்கல்: கட்சி ஆரம்பித்து உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர், அது எப்போதும் நடக்காது என திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார். திண்டுக்கல்லில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், ‘‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரம் இதுவரை 100 தொகுதியை கடந்து எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டு இருக்கிறார். அதிமுகவில் அவர் பல திட்டங்களை கொண்டு வந்தார். பாஜ மட்டும் இல்லாமல் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவார்கள். உடனே கட்சி ஆரம்பித்து உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர், அது எப்போதும் நடக்காது’’ என்று பேசினார்.

Related Stories: