திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூர், ஆக. 23: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 3வது குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் வஞ்சிபாளையம் சாலை, திருவள்ளுவர் நகர் ரயில் பாதையின் குறுக்கே மாநில நெடுஞ்சாலை துறையினரால் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, பாலத்தின் விளிம்பு பகுதியின் கீழ் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தினரால் விநியோகம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வரும் 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களில் இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமீத் கூறியுள்ளார்.

 

Related Stories: