அமைச்சர் காமராஜ் தகவல் நீடாமங்கலம் வேளாண். அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழாவில் பாதுகாப்பு கையேடு வெளியீடு

நீடாமங்கலம், டிச. 11: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண் வள தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வேப்பம் குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு தலைமை வகித்தார்.

இவ்விழாவினைத் தொடங்கி வைத்து நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் வரவேற்று பேசினார். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வன். கருத்துக்காட்சியை திறந்து வைத்தார். திருவாருர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ரவீந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்டராமன், நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் சாருமதி, ஜெயின் இர்ரிகேசன் மேலாளர் குருசாமி, இப்கோ கள அலுவலர் பொம்மனன் மற்றும் சரவணன், வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அனுராதா, சுற்றுச்சூழல் உதவி பேராசிரியர் செல்வமுருகன் ஆகியோர் செயல் விளக்கமளித்தனர். இவ்விழாவில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன், மனையியல் மற்றும் சத்தியல் துறை உதவி பேராசிரியர் கமல சுந்தரி, கால்நடை துறை உதவி பேராசிரியர் சபாபதி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரையாற்றினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசீலன், பாஸ்கர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்சியில் விவசாயிகள் மண் மற்றும் நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொண்டு மண் வள அட்டைகளை பெற்று கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 93 விவசாயிகள், 12 அலுவலர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories: