இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை

தேர்-அல்-பலாஹ்: கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் நடந்து வருகின்றது. இதனிடையே காசா நகரை கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ராணுவத்துக்கு அதிகாரம் கொடுப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு கூறிய ஒரு நாளுக்கு பின் நேற்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான இஸ்ரேல் கட்ஸ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இஸ்ரேலின் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் அங்கு விரிவாக்கப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகின்றது. காசா நகரம் அழிக்கப்படலாம். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் வரை, காசாவில் ஹமாஸின் கொலைகாரர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் தலைகள் மீது நரகத்தின் வாயில்கள் விரைவில் திறக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: