தொண்டனை சித்ரவதைப்படுத்தி கேரவனுக்குள் ஒளிந்து கொள்வதா? விஜய்க்கு திமுக மாணவர் அணி கேள்வி

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: சேலத்தில் 5 லட்சம் இளைஞர்களைக் கூட்டி 12 ஏக்கருக்கு பந்தல் போட்டு அரசியல் அறிஞர்களைப் பேச வைத்து மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் பேசினாலும், அதுவரை தொண்டர்களை நிழலில் அமர வைத்து குடிக்கத் தண்ணீரும், தேநீரும், உண்ண சைவ, அசைவ உணவும் கொடுத்து புகைப்படத்தில் கூட்டம் தெரியவில்லை என்றாலும் வந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாநாடு நடத்தியவர் எங்கள் உதயநிதி ஸ்டாலின்.

வந்த தொண்டர்களுக்கு தண்ணீர் கொடுக்காது, இளைப்பாறக் கூடாரம் போடாது, தடுப்பு வேலியில் க்ரீஸ் தடவி, சாமானிய தொண்டனைச் சித்ரவதைப்படுத்தி மாற்று அரசியலை தருகிறேன் என கேரவனுக்குள் ஒளிந்துகொண்டு படம் காட்டுகிறார் நடிகர் விஜய். தடுப்புகளில் க்ரீஸ் தடவும் நீங்கள், தியேட்டர் இருக்கைகளிலும் அன்று க்ரீஸ் தடவி இருந்தால் இந்த ரசிகர்கள் கூட்டம் உங்களின் கோர முகத்தை அப்போதே புரிந்துகொண்டிருக்கும் சுயநலம் நடிகர் விஜய்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: