கெய்ர்ன்ஸ்: ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஆஸியின் கெய்ர்ன்ஸ் நகரில் நடந்தது. முதலில் ஆடிய டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணியின் அய்டன் மார்க்ரம் 82, கேப்டன் பவுமா 65, மேத்யூ பிரீட்ஸ்க் 57 ரன் என வெளுத்து வாங்கினர்.
50 ஓவர் முடிவில் தெ.ஆ 8 விக்கெட் இழப்பு 296 ரன் குவித்தது. பின், 297 ரன் இலக்குடன் களமிறங்கிய ஆஸி அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட்டாகினர். 40.5 ஓவரில், ஆஸி, 198 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. எனவே தெ.ஆ 98 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது
