பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பெயர்கள் வெளியீடு: தேர்தல் அதிகாரி தகவல்

பாட்னா: பீகாரில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இந்த வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பீகார் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 65 லட்சம் பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவர்கள், வெளிமாநிலத்திற்கு குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. ரோதஸ், பெகுசராய், அர்வால், சிவான், போஜ்புர் மற்றும் பிற இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக பாட்னாவில் 3.95 லட்சம் பேரும் மதுபானியில் 3.52 லட்சம், கிழக்கு சம்பரானில் 3.16 லட்சம், கோபால்கஞ்சில் 3.10 லட்சம், சமஸ்திபூரில் 2.83 லட்சம், முசாபர்பூரில் 2.82 லட்சம் பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: