ரெட்டிபாளையத்தில் புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்

அரியலூர், டிச.9: ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, கீழப்பழூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கோவில் எசனை அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஏலாக்குறிச்சி மேல்நிலைபள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசின் நிவாரணமாக 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை மற்றும் குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100வீதமும் , ஓட்டு வீடுகளுக்கு ரூ.5,200 வீதமும் அரசின் நிவாரண உதவியாக வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் அரசின் நிவாரண உதவிகளை வழங்கிய அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன், மழையால் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளாகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தெரிவித்ததாவது, மழைக்காலங்களில் பரவும் தொற்று நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பருகவும், தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து, மழைக்கால தொற்று நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது, டிஆர்ஓ ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி (அரியலூர்), சுமதி (திருமானூர்), ஆர்டிஓ ஜோதி, தாசில்தார் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுடன் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: