கரூர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

கரூர், ஆக. 15: சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில்வே நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்தியா முழுதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவு கூடும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் மற்றும், தினமும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும் கரூர் ரயில்வே நிலையத்திலும் ரயில்வே போலீசார் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். அதன்படி, மெட்டல் டிடெக்டர் உதவியுடன், ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் உடமைகள் மற்றும் ரயிலவே நிலையத்தில் காத்திருந்த பயணிகள் போன்ற அனைவரிடமும் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.போலீசார்களின் இந்த சோதனை காரணமாக ரயில்வே நிலைய வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: