சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நாளை மூடல்

கரூர், ஆக. 14: சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஆகஸ்ட் 15 உலர்தினமாக அனுசரிக்கப்படுமென கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வரும் 15ம்தேதி சுதந்திர தினம்’ என்பதால், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஓட்டல்கள் உலர்தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உரிமம் கூடங்கள் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் விற்பனை ஏதும் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது. மேற்படி தினத்தன்று விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: