அதிமுக – அமமுக நிர்வாகிகள் அடிதடி

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சூரமங்கலம் பகுதி-1ன் செயலாளராக இருப்பவர் மாரியப்பன். இவர் பள்ளப்பட்டி தொடக்க கூட்டுறவு வேளாண்மை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த அமமுக வட்ட செயலாளராக இருக்கும் விஜயகுமார் என்பவர் வந்தார். இந்நிலையில் மாரியப்பனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் கோயில் தொடர்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. வார்த்தை முற்றிய நிலையில் மாரியப்பன், விஜயகுமாரை தாக்கியுள்ளார். விஜயகுமாரும் பதிலுக்கு மாரியப்பனின் கன்னத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: