பள்ளிபாளையம், ஆக. 14: பள்ளிபாளையம் ஒன்றியம் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நடந்த முகாமை, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கி உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கினார். பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை, தொழிலாளர் சலுகைகள், வேளாண்மைத்துறையின் மூலம் கிடைக்க வேண்டிய உரம் மருந்துகள் போன்ற பிரச்னைகளை உரிய விசாரணைக்கு பின்னர் 45 நாட்களுக்குள் தீர்வுகாணப்படுமென உறுதியளிக்கப்பட்டது. முகாமில் 1233 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 465 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் கொடுத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக பொறுப்பாளர் இளங்கோவன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
- ஸ்டாலின்
- Pallipalayam
- திட்டம்
- கொக்கராயன்பேட்டை அரசு பள்ளி
- யூனியன்
- தாசில்தார் சிவகுமார்
- சட்டமன்ற உறுப்பினர்
- மூர்த்தி
