பெரம்பலூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரி அமைக்க விண்ணப்பம்

பெரம்பலூர், ஆக. 13: பெரம்பலூர் அருகே கல்குவாரி அனுமதிகோரி தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குநர் அனில் மேஷ்ராம், மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் ஆய்வு செய்தார். பெரம்பலூர் அருகே அரணாரை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோனேரி பாளையம்மலைப்பாதை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கல் குவாரிக்கு அனுமதி வேண்டி தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக, கனிம நிறுவன மேலாண் இயக்குநர் அனில் மேஷ்ராம், மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் கல்குவாரி வேண்டி பெறப்பட்ட மனு மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், அவ்விடத்தில் பார்வையிட்ட கனிம நிறுவன மேலாண் இயக்குநர், நில வரைபடம், சுற்றுச்சூழல் தொடர்பாகவும் மற்றும் மலை பரப்பு குறித்த விவரங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பெர்னாட், பெரம்பலூர் கோட்டாட்சியர் சக்திவேல், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: