கரூர், ஆக. 13: கரூர் அருகே அதிக போதையில் மயங்கி விழுந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மதுரையை சேர்ந்தவர் குட்டிமணி (37). கொத்தனார். இவர், கருரில் தங்கியிருந்து கொத்தனராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி கரூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பாருக்கு சென்று அதிகளவு குடித்து விட்டு மயங்கியதாக கூறப்படுகிறது.அருகில் உள்ளவர்கள் அவரை கருர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
