யு12 ஆசிய குத்துச்சண்டை: தங்கம் வென்று ரித்திகா சாதனை

பாங்காக்: தாய்லாந்தில் நடந்த 22 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தாய்லாந்தின் பாங்காக் நகரில், 22 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில், 80+ கிலோ எடைப் பிரிவு மகளிர் போட்டியில் இந்திய வீராங்கனை ரித்திகா பங்கேற்றார். தொடர் வெற்றிகள் பெற்று வந்த அவர் இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை அஸ்ஸெல் டோக்டாசினை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட ரித்திகா, 4-1 என்ற புள்ளிக்கணக்கில் மகத்தான வெற்றி பெற்றார். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை அவர் தட்டிச் சென்றார். டோக்டாசினுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை யாத்ரி படேல், உஸ்பெகிஸ்தான் வீராங்கனை குமோரபேனு மாமஜோனோவா உடன் மோதினார். இப்போட்டியில் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியை தழுவிய யாத்ரி, வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷவ்கட்ஜோன் போல்டே உடன் மோதினார். இப்போட்டியில் தோல்வியை தழுவிய நீரஜ், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Related Stories: