117 குடிசை வீடுகள் சேதம்

சிவகங்கை, டிச. 8:  சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் புரெவி புயலால் டிச.3 முதல் 6ம் தேதி வரை மொத்தம் 91.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக 117 குடிசைகள், மண் சுவர் வீடுகள் பகுதியாகவும், 13 குடிசைகள் முழுவதுமாகவும் சேதமடைந்துள்ளன. டிச.3ல் காரைக்குடியில் பூமாதேவி என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்தார். 3 பசு மாடுகள், 5 வெள்ளாடுகள் உயிரிழந்துள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 24.17 ஹெக்டேர் நெற்பயிர் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த குடிசைகள், மனித, கால்நடை உயிர் இழப்புக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: