வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு

குன்னம், ஆக.12: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் மணிமேகலை ஜெயபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேப்பூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகள் எம்.ஏ (தமிழ், ஆங்கிலம்), எம்.எஸ்.சி (கணிதம்), எம்.காம் (வணிகவியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 11/08/2025 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீடு (முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, பழங்குடியினர்), நடைபெற்றது. 13/08/2025 ஆம் தேதி பொது கலந்தாய்வும் நடக்க உள்ளது. இந்த கலந்தாய்வின் போது மாணவிகள் தங்களது இணையதளம் மூலம் விண்ணப்பித்த படிவம், மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு 4 புகைப்படங்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியோற்றுடன் (சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்) சேர்க்கைக்கு கொண்டு வரவேண்டும் என முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: