தோகைமலையில் அனுமதியில்லாமல் கற்களை ஏற்றிவந்த லாரி பறிமுதல்

தோகைமலை, ஏப். 5: தோகைமலையில் அனுமதி இல்லாமல் அரளை கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரியை குளித்தலை ஆர்டிஓ பறிமுதல் செய்தார். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சியில் நடைபெறும் மாவட்ட கலெக்டரின் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கான பொதுமக்களின் கோரிக்கை மனு குறித்து, விசாரனை செய்வதற்காக நேற்று குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவி மற்றும் குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர். தோகைமலை அருகே உள்ள வௌ்ளப்பட்டியில் உள்ள கல் குவாரியில் டிப்பர் லாரி ஒன்று அரளை கற்களை ஏற்றிக்கொண்டு இருந்து உள்ளது. இதனால் அந்த லாரியை ஆய்வு செய்து விசானை செய்ய தோகைமலை விஏஓவிற்கு குளித்தலை ஆர்டிஓ உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அரளை கற்களை ஏற்றிய லாரியை ஆய்வு செய்ய வருவாய்த்துறையினர் சென்றனர். அப்போது அந்த லாரி குளித்தலை நோக்கி சென்றுகொண்டு இருந்ததால் இதனை அறிந்த வருவாய்த்துறையினர் கழுகூர் பகுதியில் உள்ள ரைஸ்மில் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த லாரியை ஆய்வு செய்தபோது டிப்பர் லாரியில் ஏற்றி வந்த கற்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பழையகோட்டை பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கருப்பூர் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான தேதி குறிப்பிடாமல் உள்ள நடைசீட்டை லாரி டிரைவர் காண்பித்து உள்ளார்.

இதனால் உரிய அரசு அனுமதி இல்லாமல் கனிமத்தை கடத்தி வந்ததது விசாரனையில் தெரியவந்து உள்ளது. இதனால் குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி அனுமதி இல்லாமல் அரளை கற்களை கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தோகைமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். அதன்பேரில் டிப்பர் லாரியின் டிரைவர் தோகைமலை வௌ்ளப்பட்டியை சேர்ந்த பரமசிவம் மகன் கருப்பையா வயது 51. லாரியின் உரிமையாளர் வௌ்ளப்பட்டி ஆறுமுகம் மகன் பரந்தாமன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்த போலீசார, லாரி டிரைவர கருப்பையாவை கைது செய்தனர்.

The post தோகைமலையில் அனுமதியில்லாமல் கற்களை ஏற்றிவந்த லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: