கொலை வழக்கை முறையாக விசாரிக்காத சூலூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்; டிஐஜி உத்தரவு

கோவை, ஆக. 11: கொலை வழக்கை முறையாக விசாரிக்காத சூலூர் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவிட்டார். கோவை செட்டிப்பளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் நண்பரை கொலை செய்து வீசியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன், நெல்லையை சேர்ந்த முருகபெருமாள் ஆகியோர் சரணடைந்தனர்.

இதுகுறித்து செட்டிப்பளையம், சூலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டரான லெனின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் லெனின் வழக்கை முறையாக விசாரிக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும், கொலை வழக்கில் தகவல்கள் முன்பே தெரிந்தும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார். இந்த தகவல் டிஐஜி சசிமோகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து டிஐஜி சசிமோகன், இன்ஸ்பெக்டர் லெனினை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

 

Related Stories: