காரில் கஞ்சா கடத்திய 2 பேருக்கு 12 ஆண்டு சிறை

கோவை, டிச. 19: காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை சூலூர் போலீசார் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி நீலம்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவிநாசி ரோட்டில் இருந்து வந்த காரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 2 பேர் இறங்கி தப்பிஓட முயற்சி செய்தார். போலீசார் அவர்களை துரத்தி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த சிவா (42) மற்றும் ஜெயபால் (41) என்பதும், 42 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இந்த வழக்கு விசாரணையானது கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட சிவா, ஜெயபால் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார்.

Related Stories: