ஓட்டலில் பணம் செல்போன் துணிகர திருட்டு

சேலம், ஆக.11: சேலம் இரும்பாலை தளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (58). இவர் சித்தனூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் ஓட்டலின் ஒருபக்க ஷட்டரை மூடி விட்டு இரவு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்த போது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.17ஆயிரம், 2 செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மனோகரன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: