கான்கிரீட் ஷீட் திருடியவர் கைது

நாமக்கல், ஆக.11:சேந்தமங்கலம் காந்திபுரத்தை சேர்ந்தவர் கலைவாணன் (37). இவர் நாமக்கல் – எருமப்பட்டி சாலை விரிவாக்க பணியில் மேற்பார்வையாளராக இருக்கிறார். சாலை அமைக்கும் பணிக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்து வருகிறார். நேற்று முன்தினம், தூசூர் ஏரிக்கரை பகுதிக்கு தண்ணீர் விடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு ஆம்னிவேனில் 40 கான்கிரீட் ஷீட்டுகள் ஏற்றப்பட்டு இருந்தன. இது பற்றி அவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது அங்கிருந்த 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து கேட்டபோது, அவர் செல்லப்பா காலனியை சேர்ந்த சுரேஷ் (48) என்பதும், இட்லி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரை நாமக்கல் போலீசில் கலைவாணன் ஒப்படைத்தார். போலீசார் சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: