ஈரோடு, ஆக. 9: ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இதில், அரசு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், அவுட்சோர்சிங் மற்றும் கான்ட்ராக்ட் முறைகளை ரத்து செய்து, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், ஈரோடு தாலுகா அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
