ஆடி 4வது வெள்ளியையொட்டி கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஈரோடு, ஆக. 9: ஆடி மாத 4வது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அதன்படி, நேற்று ஆடி மாதம் 4வது வெள்ளிக்கிழமையையொட்டி, அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள்நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். பெண்கள் வேண்டுதல் தீபமும் ஏற்றி வழிபட்டனர்.

இதேபோல, சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் என மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், வரலட்சுமி விரதம் என்பதால் வீடுகளில் பெண்கள் உறவினர்கள், நண்பர்களை அழைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 

Related Stories: