புன்னம்சத்திரம் அருகே கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம், ஆக. 9: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே உப்பு பாளையம் பிரிவு ரோடு பகுதியில் உள்ள ஒரு முள்ளுக்காட்டில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த சத்திரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (29) என்பவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: