ஆடி வெள்ளி திருவிழா கோலாகலம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஆக. 9: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பச்சையம்மன் மன்னார்சாமி கோயிலில் நடைபெறும் ஆடி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பானது. அதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி, பச்சையம்மன் பவனி வருகிறார். அதன்படி ஆடி 4ம் வெள்ளியான நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் அன்ன வாகனத்தில் பச்சையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வரும் 16ம் தேதி ஆடி 5ம் வெள்ளியன்று ரிஷப வாகனத்தில் பச்சையம்மன் பவனி வருகிறார். ஆடி வெள்ளி முன்னிட்டு பச்சையம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி திருவிழா கோலாகலமாக நடந்தது.

Related Stories: