கொப்பரை விலை சரிவு

ஓமலூர், ஆக.9: ஓமலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய அளவிலான மின்னணு கொப்பரை மற்றும் தட்டை பயிர் ஏலம் நடந்தது. இதில், 4,115 கிலோ கொப்பரை ரூ.7.59 லட்சத்திற்கும், தட்டை பயிர் மொத்தம் 68 கிலோ, ரூ.3,740க்கு விற்பனையானது. கொப்பரை விலை கடந்த ஒரு வருடமாக உயர்ந்து கொண்டே விற்பனையானது. இந்நிலையில், கடந்த 2 வாரமாக கொப்பரை விலை சரிவை கண்டுள்ளது. சுமார் ரூ.255 வரை விற்பனையான கொப்பரை, 2 வாரமாக தொடர்ந்து சரிவடைந்து தற்போது, ரூ.202க்கு விற்பனையாகிறது. இதனால், கொப்பரை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேங்காய் அறுவடை தொடங்கியுள்ளதால், விலை சரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: