கரூர், ஆக. 8: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் புலியூர் பேரூராட்சியில் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று புலியூர் பேரூராட்சியில் வார்டு எண்.1,2,3,4,5,6,7 – க்குட்பட்ட திருமண மண்டபத்திலும், க.பரமத்தி வட்டாரத்தில், புன்னம் -2- மற்றும் பவித்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு புன்னம் சத்திரம் அங்காளம்மன் மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், இச்சிறப்பு முகாமில் மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வுகானலாமென கலெக்டர் தெரிவித்துள்ளார். இதில் மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொள்கிறார்.
