டெல்லியை தொடர்ந்து சென்னை மெட்ரோ டிக்கெட்டுகள் ஊபர் செயலி மூலம் விற்பனை..!!

சென்னை: ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. CMRL பயணிகள் பாதுகாப்பாகவும், விரைவாகவும், ஓரளவுக்கு குறைந்த விலையிலும் பொது போக்குவரத்தில் பயணிப்பதற்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, டிக்கெட் எடுக்கும் செயல்முறையையும் CMRL பல விதங்களில் எளிதாக்கி உள்ளது. கவுண்டரில் டிக்கெட் எடுப்பதை காட்டிலும் CMRL மற்றும் Phonepe செயலிகள் மூலம் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி வழங்கி வருகிறது. இதனால் நீங்கள் கூட்டத்தில் நின்று டிக்கெட் எடுக்கவும் தேவையில்லை.

இந்நிலையில், ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) என்ற நிறுவனம், இந்த நிலையில் ஊபர் செயலியிலும் இனி சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை பெறலாம் என இன்று ஆகஸ்ட் .7ம் தேதி அறிவித்துள்ளது. ஊபர் செயலி மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை 50 சதவீதம் சலுகை விலையில் மெட்ரோ டிக்கெட்டை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. (QR – Codeஐ) க்கியூஆர் கோர்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் டிக்கெட்டை பெறலாம். அதுமட்டுமின்றி நிகழ்நேர போக்குவரத்துத் தகவல்களையும் பெற முடியும்.

மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லவும், திரும்பவும் பயணக்கட்டணத்திலும் 50சதவீதம் சலுகை அறிவித்துள்ளது. ஆட்டோ, கார், டூ வீலர் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லிக்கு அடுத்து ஊபர் செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் வசதியை பெறும் 2வது நகரமாக சென்னை திகழ்கிறது.

 

Related Stories: