வேலை வாய்ப்புடன் கூடிய நர்சிங் பயிற்சி பெற இருபாலருக்கும் அழைப்பு

பெரம்பலூர், ஆக. 6: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேலை வாய்ப்புடன் கூடிய நர்சிங் பயிற்சி பெற இருபாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநர் பரமேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை உயர்திறன் பயிற்சி மையத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், இலவசமாக ஜெனரல் டிய்ட்டி அசிசிடெண்ட் (GENERAL DUTY ASSISTANT) நர்சிங் பயிற்சி 2 மாதம் வேலை வாய்ப்புடன் அளிக்கப் படுகிறது.

ஆண், பெண் இருபாலரும் சேரலாம். குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அல்லது பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி படித்திருக்கலாம். 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி நேரம் தினமும் காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரையாகும். பயிற்சியாளர்களுக்கு இலவசமாக பயிற்சிக்கான உபகரணங்கள், சீருடைகள் மற்றும் ஊக்கதொகை வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் மாநில அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை உயர்திறன் பயிற்சி மையம், பாலக்கரை, பெரம்பலூர் என்ற முகவரியில் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 98405 16745, 8248798388, 63796 78105 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: