பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை

காரைக்குடி, டிச.4:  பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் மாநிலத்தலைவர் பீட்டர்ராஜா கூறுகையில், அரசு பள்ளிகளில் 2020-21ம் கல்வியாண்டில் 5.18 லட்சத்திற்கு மேல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். புதிய மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி ஆசிரியர்கள் மற்றும் தலைமை -ஆசிரியர்கள் புதிய பணியிடத்தில் பணியில் சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒரு சில முதன்மைக்கல்வி அலுவலகங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ளது. இதனை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: