பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை

ஈரோடு, டிச.4 விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த மாநில திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி யிடம் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல்ராமன் தலைமையில் மாவீரன் பொல்லான் வரலாறு மீட்புக் குழு நிர்வாகிகள் சந்தித்து மாவீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் மற்றும் சுட்டு கொல்லப்பட்ட இடமான அறச்சலூர் கிராமம் நல்லமங்கா பாளையத்தில் நினைவு சின்னம் அமைக்க கோரியும், ஈரோட்டில் ப.செ. பார்க் பெரியார் சிலை அருகில் அம்பேத்கர் சிலை அமைக்க ஆதரவு கோரியும் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியின் போது திமுக மாநில துணை பொது செயலாளர் அந்தியூர்  செல்வராசு எம்.பி., ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி, மாநில பொதுசெயலாளர் ஆறுமுகம், மாநில துணை தலைவர் சன்முகம், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், ஆதி தமிழர் கட்சி மாநில துணை பொது செயலாளர் அறிவழகன், திமுக பெருந்துறை நகர துணை செயலாளர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>