இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே,‘‘ஜனநாயக அமைப்பின் அடிப்படையில் தான் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள்ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு எஸ்சி பிரிவினருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2008 நவம்பர் 27ம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, சட்டம் இயற்றப்பட்டு, 2009ம் ஆண்டு ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டன.
இதுகுறித்த அனைத்து தரவுகளையும் ஓய்வு நீதிபதி ஜெனார்த்தனன் விரிவாக ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக விதிகளின் முறைப்படி தான் சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சட்டப்பிரிவு 341ன் கீழ் பட்டியலில் ஒரு ஜாதி சேர்க்கப்பட்டவுடன், சமூகத்தின் கீழ்நிலைப் பிரிவினருக்கு உதவும் வகையில், பட்டியல் சாதிகளுக்குள் துணை வகைப்பாட்டை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற அரசுக்கு தனி அதிகாரம் உள்ளது என்று வாதாடினார்.
The post ஜனநாயக அமைப்பின் அடிப்படையில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.