மேலும் லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பியான அன்மோல் பிஷ்னோய்தான் இந்த கொலையை கனடாவில் இருந்து செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியும், பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டவருமான சிவக்குமார் உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் உள்ளூர் போலீசார் உதவியுடன் சிவக்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களை மும்பை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாபா சித்திக் கொலை வழக்கில் தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்டவர் உள்பட 3 பேர் கைது: இதுவரை 21 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.