தஞ்சையில் மதுபானம் குடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில் மதுபானக் கூடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை: தஞ்சையில் மதுபானம் குடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில் மதுபானக் கூடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தஞ்சை கிழவாசல் பகுதியில் இயங்கி வரக்கூடிய மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக கடைதிறப்பதற்கு முன்பாக மது அருந்திய இருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தற்பொழுது அந்த மதுபான கூடத்தில் தடயவியல் நிபுணர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறிப்பாக தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து மீன் வியாபாரிகள் குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய இருவர் பலியாகியுள்ளனர். இது சம்மந்தப்பட்ட டாஸ்மாக், பார் மற்றும் டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சயனைடு கலந்த மது குடித்து தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணை செய்து வரக்கூடிய சூழ்நிலையில் இந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் பாரில் அவர்கள் குடித்த இடம் எது உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள், இதற்காக பூட்டி சீல் வைக்கப்பட்ட கடையில் சீலை உடைத்து டாஸ்மாக் பார் உள்ளே நுழைந்து தடயவியல் ஆய்வாளர்கள் தற்போழுது ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள் .

இவர்களுடன் தஞ்சை நகர போலீஸ் சுப்ரீடீன்ட் ராஜா மேற்கு காவல் நிலை ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட ஏராளமா போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில் தற்பொழுது இந்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

The post தஞ்சையில் மதுபானம் குடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில் மதுபானக் கூடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: