2ம்நாளாக ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு: நெல்லையில் 1,427 பேர் ஆப்சென்ட்

நெல்லை, ஜன.8: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வு 2ம் நாளாக நேற்று நடந்தது. நெல்லையில் 1,427 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு அரசுத் துறையில் ஐடிஐ முதல்வர்-1, நீர்வளத்துறையில் உதவி பொறியாளர்-4, பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர்-5, நெடுஞ்சாலைத் துறையில் உதவி பொறியாளர்-52, பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) – 36, மின்துறையில் உதவி பொறியாளர் எலக்ட்ரிக்கல் – 36, சிவில்-5, மெக்கானிக்கல்-9, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி பொறியாளர்-49, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி பொறியாளர் (சிவில்)-78, மெக்கானிக்கல்-20, தாட்கோ உதவி பொறியாளர் சிவில்-25 உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் 368 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களில் 2வது நாளாக நேற்றும் நடந்தது. காலையிலும், பிற்பகலிலும் இரு பகுதிகளாக தேர்வு நடத்தப்பட்டது.

நெல்லையில் மேக்தலின் மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, பாளை ரோஸ்மேரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. நேற்று 2ம் நாளாக நடத்த இந்த தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 225 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் 1427 பேர் வரவில்லை. தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

The post 2ம்நாளாக ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு: நெல்லையில் 1,427 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: