1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு11ம் தேதி ஆண்டு இறுதித்தேர்வு

தர்மபுரி ஏப்.9: தர்மபுரி மாவட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு வரும் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு பொது தேர்வு முடிந்து விட்டது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் பாடத்திற்கான தேர்வு முடிந்துள்ளது. 10ம் தேதி(நாளை) ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. வரும் 20ம் தேதி தேர்வு முடிகிறது. இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர் உள்ளனர். தர்மபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் ஆண்டு அட்டவணைப்படி, வரும் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிந்து, தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 11ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை, ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. பள்ளியின் கடைசி வேலைநாள் வரும் 28ம் தேதி என்பதால், மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்தாலும், 28ம் தேதி வரை ஆசிரியர்கள் பணிக்கு வருவார்கள். 29ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும்,’ என்றார்.

The post 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு

11ம் தேதி ஆண்டு இறுதித்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: