திருத்துறைப்பூண்டி பகுதியில் செயின் கதிர் இயந்திரங்கள் தட்டுப்பாட்டால் அறுவடை பாதிப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜன.28: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஆண்டு 37 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை, உரத்தட்டுபாடு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு இடையில் செய்த சாகுபடி அறுவடைக்கு வந்தநிலையில் கடந்த 17 ம்தேதி பெய்தமழையில் கதிர்கள் சாய்ந்து விட்டது மேலும் வயல்களில் தண்ணீர் நிற்கிறது இதனால் அறுவடை பாதிக்கிறது. வயல் தண்ணீர் உள்ளதால் டயர் கதிர் அறுக்கு இயந் திரம் போக முடியாது. செயின் கதிர் அறுவடை இயந்திரம் தான் போக முடியும். ஆனால் செயின் கதிர் அறுவடை இயந்திரம் அதிக அளவில் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு வரவில்லை. எனவே வேறு மாவட்டகளில் இருந்து செயின் கதிர் அறுவடைஇயந்திரங்களை கொண்டு வர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கடந்த ஆண்டு 56 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யஇதுவரை 50 அரசுநெரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் கூறுகையில் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 35,000 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இது தவிர முத்துப்பேட்டையில் 30,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து உள்ளனர் அனைத்தும் உடனடியாகஅறுவடை செய்யும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அறுவடை இயந்திரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் பெய்த மழையினால் பயிர்கள் சாய்ந்து அடி நிலம் ஈரமாகவும் களிமண் கலந்தும் உள்ளது. இதனால் பெல்ட் அறுவடை இயந்திரங்கள் மட்டுமே பயிர்களை சேதாரமில்லாமல் அறுக்க இயலும்.ஆனால் டயர் அறுவடை இயந்திரம் மட்டுமே செய்ய தயார் நிலையில் உள்ளது. இதனால் அறுவடை செய்தால் பயிர்களும் வைக்கோலும் சேற்றில் மூழ்கி சேதாரம் ஏற்படும்.ஆதலால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட முத்தரப்பு கூட்டத்தில் முடிவு படி உடனடியாக பெல்ட் அறுவடை இயந்திரங்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்கி திருத்துறைப்பூண்டி தாலுகா மக்களுக்கு குறைந்த வாடகையில் அறுவடை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல் நன்றாக மகசூலை பெற இயலாமல் விவசாயிகள் கஷ்டப்பட நேரிடும் என்றார்.

Related Stories: